பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 11 அன்று சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 10 OCT 2025 6:10PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 11 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் பின்னர் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு திரண்டிருப்போரிடையே உரையாற்றுவார்.

விவசாயிகள் நலன், வேளாண்மையில் தற்சார்பு, ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் என்ற பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. நவீன வேளாண் நடைமுறைகள், விவசாயிகளுக்கு ஆதரவு, விவசாயிகளை மையப்படுத்திய முன்முயற்சிகளின் குறிப்பிடத்தக்க சிறப்புகளை கொண்டாடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக இந்த நிகழ்ச்சி இருக்கும். 

வேளாண் துறையில் ரூ.35,440 கோடி ஒதுக்கீட்டுடனான 2 முக்கிய திட்டங்களை பிரதமர் இதில் தொடங்கிவைப்பார். மேலும் ரூ.24,000 கோடி முதலீட்டில் பிரதமரின் தன்தான்ய விவசாய திட்டத்தையும் அவர் தொடங்கிவைப்பார்.

இந்த நிகழ்ச்சியின் போது இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம், மைத்ரி தொழில்நுட்பாளர்கள், பிரதமரின் விவசாய வள மையங்கள், பொதுசேவை மையங்கள் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குவார்.


 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177454

 

***

SS/SMB/AG/SH

 


(Release ID: 2177582) Visitor Counter : 13