உள்துறை அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 5.0 மூலம் 40,880 பொதுமக்களின் குறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தீ்ர்வு கண்டுள்ளது
Posted On:
07 OCT 2025 12:34PM by PIB Chennai
அரசு அலுவலகங்களில் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும், நிலுவைப் பணிகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதலின்படி உள்துறை அமைச்சகம் சிறப்பு இயக்கத்தை நடத்தியுள்ளது.
மாதாந்திர அடிப்படையில் 2024 நவம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை நிலுவையில் உள்ள பணிகளுக்குத் தீர்வு காணும் வகையில் உள்துறை அமைச்சகம் மற்றும் அதன் நிறுவனங்கள், சிறப்பு இயக்கத்தை நடத்தியுள்ளன.
உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு அலுவலகங்களில் 2,405 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 493 குறிப்புகள், அமைச்சரவையின் இரண்டு பரிந்துரைகள், மாநில அரசுகளின் 104 குறிப்புகள், பிரதமர் அலுவலகத்தின் 30 குறிப்புகள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்பட்டது.
2024 நவம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை 40,880 பொதுமக்களின் குறைகளுக்கும், 1864 பொதுமக்களின் குறைதீர்ப்பு தொடர்பான மேல்முறையீடுகளுக்கும் அமைச்சகம் தீர்வு கண்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை அலுவலகங்களில் 79,774 சதுரஅடி அளவிலான இடம் தூய்மைப்படுத்தப்பட்டது. சிறப்பு இயக்கம் 5.0 பணிகள் அமைச்சகத்தின் உயர்நிலைக் குழுவால் கண்காணிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175689
***
SS/IR/KPG/KR
(Release ID: 2175821)
Visitor Counter : 7