குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 06 OCT 2025 2:16PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (அக்டோபர் 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கினார்.

மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்டம் என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றாகும். இது தன்னார்வ அடிப்படையில் சமூக சேவைகள் வாயிலாக மாணவர்களின் ஆளுமையையும், குணநலன்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் 1969 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இளைய தலைமுறையினர் சமூக சேவை, சமுதாய மேம்பாடு மற்றும் தேசத்தைக் கட்டமைத்தல் ஆகிய துறைகளில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 1993-94 ஆம் ஆண்டில் மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

***

(Release ID: 2175294)

SS/SE/SH


(Release ID: 2175505) Visitor Counter : 9