பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டார்ஜிலிங்கில் பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2025 12:57PM by PIB Chennai

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இன்று பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் திரு. மோடி கூறியிருப்பதாவது, "டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்

கனமழை மற்றும் நிலச்சரிவுகளின் பின்னணியில் டார்ஜிலிங் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக டார்ஜிலிங் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

***

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2175000) வருகையாளர் எண்ணிக்கை : 30