பிரதமர் அலுவலகம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிடுகிறார்
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்பு, மரபு மற்றும் கலாச்சார பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா அமைந்துள்ளது
Posted On:
30 SEP 2025 10:30AM by PIB Chennai
ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேக் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1-ம் தேதி புதுதில்லியில் உள்ள டாக்டர அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் உரையாற்றுகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்ஜ்வார் என்பவரால் ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னார்வலர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு கலாச்சார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு போன்ற பண்புகளை மக்களிடையே கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
நாட்டை மறுகட்டமைப்பதற்கான இயக்கத்தில் தனித்துவ மக்களை மையமாகக் கொண்ட அமைப்பாக ஆர்எஸ்எஸ் இருந்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்துள்ள நாட்டின் வளர்ச்சிக்காகவும், தர்மத்தின் அடிப்படையில் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த அமைப்பு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
நாட்டுப்பற்று மற்றும் தேசியம் குறித்த நற்பண்புகளை உருவாக்குவதையே இந்த அமைப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பக்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல், தலைமைப்பண்பு போன்ற குண நலன்களை வளர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு ஸ்வயம்சேவகர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கல்வி, சுகாதாரம், சமூக நலன் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளது. புயல், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கூடுதலாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பிற அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பங்கேற்புடன் உள்ளூர் சமுதாயத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பங்காற்றியுள்ளது.
இந்த அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அதன் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவது மட்டுமின்றி, இந்தியாவின் கலாச்சார பயணத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான செய்தியாகவும் அமைந்துள்ளது.
***
(Release ID: 2172947)
SS/SV/RJ
(Release ID: 2173020)
Visitor Counter : 21
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam