உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உலக உணவு இந்தியா 2025 மாநாடு உலகளாவிய வேளாண் – உணவு மதிப்பு முறைகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தியது
Posted On:
29 SEP 2025 9:55AM by PIB Chennai
இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையின் பயணத்தில் சிறந்த தருணத்தை குறிக்கும் 4 நாள் உலக உணவு இந்தியா 2025 மாநாடு பாரத் மண்டபத்தில் நிறைவடைந்தது. இக்கண்காட்சியை ரஷ்ய துணைப் பிரதமர் திரு டிமித்ரி பத்ருஷேவ், மத்திய அமைச்சர்கள் திரு சிராக் பஸ்வான், திரு பிரதாப்ராவ் ஜாதவ், உணவு பதப்படுத்துதல் மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் திரு ரவ்னித் சிங் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் உணவு மற்றும் வேளாண் துறையின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒருங்கிணைந்தனர்.
தொடக்க உரையாற்றிய பிரதமர், நம்பிக்கைக்குரிய உலகளாவிய வினியோகஸ்தராக விளங்கும் இந்தியாவின் பங்களிப்பு குறித்து வலியுறுத்தினார். வேளாண் பன்முகத்தன்மை, 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் மற்றும் பெரிய உணவுப் பூங்காக்கள் போன்ற அரசின் முன்முயற்சிகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
இந்த உலக உணவு இந்தியா 2025 மாநாட்டில், இந்திய உணவு பதப்படுத்துதல் துறையின் மிகப்பெரும் முதலீடாக ரூபாய் 1,02,000-க்கும் அதிகமான அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
மத்திய அமைச்சர்கள் திரு நிதின் கட்கரி, திரு சிராக் பஸ்வான் ஆகியோர் தலைமையில், இந்தியா மற்றும் பல்வேறு நாட்டு முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற வட்டமேசை கூட்டம் நடைபெற்றது.
நீடித்த முதலீடுகள், மக்கும் தன்மை கொண்ட பேக்கஜிங், கழிவு மதிப்பீடுகள், நீலப் பொருளாதாரத்தின் சாத்தியக்கூறுகள், செலவை குறைத்தல் மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்த சரக்கு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
10,500 வர்த்தகர்களுக்கு இடையேயான கூட்டங்கள், 261 அரசுகளுக்கு இடையேயான கூட்டங்கள், 18,000 வாங்குவோர் – விற்பனையாளர் கூட்டங்கள் ஆகியவை இந்த நான்கு நாள் மாநாட்டில் நடைபெற்றது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172542
SS/IR/LDN/SH
(Release ID: 2172645)
Visitor Counter : 4