குடியரசுத் தலைவர் செயலகம்
71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
23 SEP 2025 8:00PM by PIB Chennai
புதுதில்லியில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று வழங்கினார். அப்போது, 2023-ம் ஆண்டிற்கான தாதாசாஹேப் பால்கே விருதை திரு மோகன்லாலுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தாதாசாஹேப் பால்வே விருது பெற்ற திரு மோகன்லால் உள்ளிட்ட விருது வென்ற அனைவரையும் வாழ்த்துவதாக தெரிவித்தார். திரு மோகன்லால் குறித்து குறிப்பிட்ட அவர், மென்மையான மற்றும் கடும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஒரு நடிகரின் முழு பிம்பத்தை வெளிக்கொண்டவர் என்று கூறினார்.
பெண்களை மையமாகக் கொண்ட சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதும் அவை விருது பெறுவதும் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். வறுமை, ஆண்களை சார்ந்திருத்தல் அல்லது பாரபட்சம் ஆகியவற்றுடன் பெண்கள் போராடிக் கொண்டிருப்பதை தான் காண்பதாக கூறினார். தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பது, சமூகத் தீமைகளுக்கு எதிராக பெண்கள் ஒன்றிணைவது, வீடு, குடும்பம் மற்றும் சமூக ஒழுங்கின் சிக்கல்களுக்கு இடையே பெண்களின் அவலநிலையை எடுத்துரைப்பது மற்றும் பாரபட்சமுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் துணிச்சல்மிக்க பெண்கள் குறித்த கதைகள் கொண்ட திரைப்படங்களுக்கு இன்று விருது வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இது போன்ற உணர்திறன் உடைய திரைப்படத் தயாரிப்பாளர்களை தாம் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170304
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2171074)
आगंतुक पटल : 37