பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் சிந்தனையாளருமான திரு எஸ்.எல். பைரப்பாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
24 SEP 2025 3:44PM by PIB Chennai
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் சிந்தனையாளருமான திரு எஸ்.எல். பைரப்பாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். தேசத்தின் சமூக சிந்தனையைத் தூண்டி, இந்தியப் பண்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்திய ஒரு மாபெரும் ஆளுமை என அவரைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலக்கியத்திற்கு, குறிப்பாக கன்னட மொழிக்கு திரு பைரப்பா ஆற்றிய பங்களிப்புகள், நாட்டின் அறிவுசார் மற்றும் கலாச்சாரத் தளத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன. வரலாறு, தத்துவம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த அவரது அச்சமற்ற ஈடுபாடு, தலைமுறைகளையும் எல்லைகளையும் கடந்து அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில், கூறியிருப்பதாவது,
“திரு எஸ்.எல். பைரப்பா அவர்களின் மறைவால், தேசத்தின் சமூக சிந்தனையைத் தூண்டி, இந்தியப் பண்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்திய ஒரு மாபெரும் ஆளுமையை நாம் இழந்துவிட்டோம். அச்சமற்ற மற்றும் காலத்தால் அழியாத சிந்தனையாளரான அவர், தனது சிந்தனையைத் தூண்டும் படைப்புகளால் கன்னட இலக்கியத்தை மிகவும் செழுமைப்படுத்தி னார். அவரது எழுத்துக்கள், சமூகத்துடன் ஆழமாகச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், செயல்படவும் தலைமுறைகளைத் தூண்டின.
நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வம், வரும் ஆண்டுகளிலும் பலரது எண்ணங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”
***
(Release ID: 2170617)
AD/SE/SH
(Release ID: 2170945)
Visitor Counter : 4
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam