பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 25 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2025 5:12PM by PIB Chennai
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய முயற்சியாக நிதியாண்டு 2025-26-ல் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 25 லட்சம் இணைப்புகளை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, “நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 25 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது, துர்க்கை அன்னைக்கு வழங்கும் மரியாதையை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு மற்றொரு சிறந்த உதாரணமாகும். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் நமது உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை வலுப்படுத்துகிறது”, என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2169676
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2170580)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam