பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன், பிரதமர் திரு மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்தால் இன்று ஐரோப்பிய ஒன்றியதுக்கும் இந்தியாவுக்கும் இடையே உத்திசார் ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் எதிர்வரும் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை கூடிய விரைவில் இந்தியாவில் நடத்துவது பற்றி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்

Posted On: 17 SEP 2025 7:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பிரதமர் திரு மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஐரோப்பிய ஆணைய தலைவர் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவரது வாழ்த்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால்இன்று  ஐரோப்பிய ஒன்றியம்இந்தியா இடையே உத்திசார் ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்திகளாகபரஸ்பர செழிப்புக்காக இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தலைவர்கள் வரவேற்றனர். மேலும் உலகளாவிய பிரச்சினைகளுக்குக் கூட்டாகத் தீர்வு காணவும்நிலைத்தன்மையை மேம்படுத்தவும்,  விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறையை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் வரவேற்றனர்.

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உக்ரைனில் நடைபெறும்  மோதலுக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண இந்தியா உறுதிபூண்டுள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் எதிர்வரும் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வருமாறு பிரதமர் திரு மோடி மீண்டும் அழைப்பு விடுத்தார்.

 

                                                                                                                                                                          ***

AD/BR/SH

 
 
 

(Release ID: 2167884)