உள்துறை அமைச்சகம்
மாநிலங்கள்யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழு தலைவர்களின் 2வது தேசிய மாநாட்டை செப்டம்பர் 16 அன்று புது தில்லியில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைக்கிறார்
Posted On:
13 SEP 2025 6:03PM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழு தலைவர்களின் 2வது தேசிய மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் 2025 செப்டம்பர் 16 அன்று தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் ஆண்டு அறிக்கை- 2024- ஐ திரு அமித் ஷா வெளியிடுவார். இணையதளம் வழியாக போதைப்பொருள் ஒழிப்பு பிரச்சாரத்தையும் தொடங்கி வைப்பார். செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டில், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள், பிற அரசுத் துறைகளின் பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், இந்த இலக்கை அடைவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கவும் இந்த மாநாடு ஒரு உத்திசார் தளமாக செயல்படும். போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் கருப்பொருள் "ஒருங்கிணைந்த தீர்மானம், பகிரப்பட்ட பொறுப்பு" என்பதாகும். நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பங்குதாரர்களும் மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் பற்றிய விரிவான ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து இந்த மாநாடு விவாதிக்கும்.
போதைப்பொருள் புழக்கம், தேவை மற்றும் தீங்கு குறைப்பு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்கள், அவற்றின் தேசிய பாதுகாப்பு தாக்கம் மற்றும் நாட்டில் போதைப்பொருள் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடலும் இந்த நிகழ்வில் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166316
***
AD/SMB/RJ
(Release ID: 2166393)
Visitor Counter : 2