பிரதமர் அலுவலகம்
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்
71,850 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Posted On:
12 SEP 2025 2:12PM by PIB Chennai
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.
மிசோராமில் செப்டம்பர் 13 அன்று பயணம் மேற்கொள்ளும் அவர், அன்று காலை 10 மணி அளவில், ஐஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள பல்வகை வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். ரயில்வே, சாலைகள், எரிசக்தி, விளையாட்டு உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். சாய்ராங் – தில்லி ராஜதானி விரைவு ரயில், போக்குவரத்தை அவர் தொடங்கி வைப்பார். இதன் மூலம் ஐஸ்வாலுக்கு தில்லியுடன் நேரடி ரயில் இணைப்பு வசதி கிடைக்க உள்ளது.
விளையாட்டு மேம்பாட்டுக்காக கேலோ இந்தியா பல்நோக்கு உள் விளையாட்டரங்கிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பின்னர் பொது நிகழ்ச்சியிலும் அவர் உரையாற்றுவார்.
இதைத் தொடர்ந்து மணிப்பூர் செல்லும் பிரதமர், பிற்பகல் 12.30 மணி அளவில் சூரசந்த்பூரில் ரூ.7300 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். இங்கு திரண்டிருக்கும் மக்களிடையே அவர் உரையாற்றுவார். பின்னர், பிற்பகல் 2.30 மணி அளவில் இம்பால் செல்லும் பிரதமர், அங்கு ரூ.1,200 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுவார்.
இதையடுத்து அசாம் செல்லும், பிரதமர் திரு நரேந்திர மோடி மாலை 5 மணி அளவில், குவஹாத்தியில் பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகா, நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பார். அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே அவர் உரையாற்றுவார்.
அசாமில், செப்டம்பர் 14 அன்றும் பயணத்தைத் தொடரும் பிரதமர், அன்று காலை 11 மணி அளவில், தாரங் என்ற இடத்தில் ரூ.18,530 கோடி மதிப்புள்ள அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் தொழில்துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார்.
மேற்கு வங்க மாநிலத்தில் செப்டம்பர் 15 அன்று பயணம் மேற்கொள்ளும் அவர், அன்று காலை 9.30 மணி அளவில், 16-வது ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டை தொடங்கி வைப்பார்.
இதையடுத்து பீகார் மாநிலத்திற்கு செல்லவிருக்கும் பிரதமர், பிற்பகல் 2.45 மணி அளவில், பூர்ணியா விமான நிலையத்தில், புதிய முனையத்தின் கட்டடத்தை தொடங்கிவைப்பார். மேலும், ரூ.36,000 கோடி மதிப்புள்ள பல்வகை வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். நிகழ்ச்சியில் திரண்டிருக்கும் மக்களிடையே அவர் உரையாற்றுவார். பீகாரில், தேசிய தாமரை விதை வாரியத்தையும் அவர் தொடங்கி வைப்பார்.
பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டப் பயனாளிகள் 35,000 பேரும் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டப்பயனாளிகள் 5,920 பேரும் பங்கேற்று நடைபெறும் புதுமனை புகுவிழாவில் ஒரு சில பயனாளிகளுக்கு அடையாளப்பூர்வமாக பிரதமர் சாவிகளை ஒப்படைப்பார். தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தொகுப்புநிலை கூட்டமைப்புகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் சமூக முதலீட்டு நிதியையும் பிரதமர் வழங்குவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165935
----
AD/SMB/KPG/KR
(Release ID: 2166020)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Kannada
,
Malayalam