பிரதமர் அலுவலகம்
சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரை திருப்புமுனையை ஏற்படுத்தியது- பிரதமர்
प्रविष्टि तिथि:
11 SEP 2025 8:49AM by PIB Chennai
சுவாமி விவேகானந்தரின் 132-வது பிறந்த தினத்தில் நடைபெறும் புனிதமான நிகழ்வில் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய தருணமாக அமைந்த என்று தெரிவித்துள்ளார். இந்த சிறப்புவாய்ந்த தருணம் நல்லிணக்கம் மற்றும் உலக அளவிலான சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது வரலாற்றில் மிகவும் போற்றத்தக்கதும், உத்வேகம் அளிக்கக் கூடிய வகையிலும் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“1983-ம் ஆண்டு சிகாகோவில் இதே நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை திருப்புமுனையை ஏற்படுத்திய தருணமாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்திய பண்பாடு குறித்து அவர் ஆற்றிய உரை சமுதாய நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் மிகவும் போற்றத்தக்கதும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
***
(Release ID: 2165501)
AD/SV/AG/KR
(रिलीज़ आईडी: 2165676)
आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati