பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் பாகல்பூர்-தும்கா-ராம்பூர்ஹட் ஒருவழி ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 SEP 2025 3:05PM by PIB Chennai
பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பாகல்பூர்-தும்கா-ராம்பூர்ஹட் ஒருவழி ரயில் பாதையை (177 கி.மீ) ரூ.3,169 கோடி செலவில் இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மேம்படுத்தப்படும் இந்த வழிப்பாதையின் மூலம் இந்திய ரயில்வேயின் இயக்கம் மேம்படும். மேம்படுத்தப்பட்ட செயல்திறன், சேவை, நம்பகத்தன்மையை இது வழங்கும். இந்த பல்தட திட்டம் நடவடிக்கைகளை எளிதாக்கி பயணிகளின் நெரிசலைக் குறைக்கும்,
இத்திட்டம் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தியோகர் (பாபா பைத்யநாத் கோயில்), தாராபித் (சக்தி பீடம்) போன்ற முக்கிய பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து வசதியை அளிக்கும். மூன்று முன்னோடி மாவட்டங்களில் (பங்கா, கோடா, தும்கா) சுமார் 28.72 லட்சம் மக்கள் வசிக்கும் சுமார் 441 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165248
***
AD/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2165290)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada