நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
அதிநவீன மின்சார வாகனச் சோதனை மையத்தை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
09 SEP 2025 12:31PM by PIB Chennai
புதுதில்லியில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில், கொல்கத்தாவின் அலிப்பூர் பிராந்திய ஆய்வகத்தில் ஒரு அதிநவீன மின்சார வாகனச் சோதனை மையத்தை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி திறந்து வைக்கிறார்.
மேம்பட்ட உள்கட்டமைப்புடன் கூடிய இந்த ஆய்வகம், மின்சார பாதுகாப்பு, பருவநிலைச் சோதனைகள், இயந்திர மற்றும் பொருள் பாதுகாப்பு உள்ளிட்ட மின்சார வாகனப் பேட்டரிகள் குறித்த முக்கியமான சோதனைகளை நடத்தும். இந்த வசதி, குறிப்பாக கிழக்கு இந்தியாவில் உள்ள மின்சார வாகனப் பேட்டரி உற்பத்தியாளர்களுக்கு நம்பகமான, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மற்றும் சான்றிதழை வழங்கும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இயக்கத் தீர்வுகளுக்கான உலகளாவிய மாற்றத்தில் மின்சார வாகனங்கள் முன்னணியில் உள்ளன. இவை புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதிலும் உமிழ்வைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 30 % மின்சார வாகனப் பயன்பாட்டு என்ற அளவை அடைய வேண்டும் என்ற லட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட, மின்சார வாகனங்களும் அவற்றின் உதிரி பாகங்களும் தேசிய மற்றும் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்ய கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164889
***
(Release ID: 2164889)
SS/PKV/KR
(Release ID: 2164915)
Visitor Counter : 2