பிரதமர் அலுவலகம்
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்
உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள நேர்மறையான முன்னேற்றங்களை இரு தலைவர்களும் வரவேற்றனர்
இந்தியாவில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்காக அதிபர் மேக்ரானை வரவேற்பதை பிரதமர் எதிர்நோக்கியுள்ளார்
பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் இன்று தொலைபேசியில் உரையாடினார்
Posted On:
06 SEP 2025 6:22PM by PIB Chennai
பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஹொரைசான் 2047 செயல்திட்டம் , இந்தோ-பசிபிக் செயல்திட்டம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டத்துக்கு ஏற்ப, இந்தியா-பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் தலைவர்கள் மீண்டும் பகிர்ந்து கொண்டனர்.
உக்ரைனில் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கு அமைதியான தீர்வு காண்பதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் இந்தியாவின் நிலையான ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
2026 பிப்ரவரியில் இந்தியா நடத்தவுள்ள செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டிற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக பிரான்ஸ் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார், மேலும் இந்தியாவில் அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறினார்.
உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், இணைந்து பணியாற்றவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
*****
(Release ID: 2164388)
AD/PKV/SG
(Release ID: 2164398)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam