கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கிய ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நடவடிக்கை கூட்டுறவுத் துறை , விவசாயிகள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களை ஊக்குவிக்கும்

Posted On: 06 SEP 2025 3:03PM by PIB Chennai

அண்மையில், முக்கிய துறைகளில் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) பரந்த அளவிலான வரி குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பு, கூட்டுறவுத் துறை , விவசாயிகள், கிராமப்புற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பெரும் ஊக்குவிப்பாக இருக்கும்வரிக்குறைப்பு நடவடிக்கையால், நாட்டில் 10 கோடிக்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் பயனடைவார்கள்இந்தச் சீர்திருத்தங்கள் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதுடன்அவற்றின் தயாரிப்புகளை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும்இது  கூட்டுறவு சங்கங்களின் வருமானத்தை அதிகரிப்பதுடன், கிராமப்புற தொழில்முனைவை ஊக்குவிக்கும். உணவு பதனப்படுத்தும் துறையில் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிக்கும். மேலும், கோடிக்கணக்கான வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் அணுகுவதை உறுதி செய்யும். ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்புகள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில், கூட்டுறவு சங்கங்களுக்கு பயனளிக்கும். நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதுடன், சிறு விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தி அமைப்புகளுக்கு  பயனளிக்கும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கொண்டுவரப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், அமுல்  போன்ற பெரிய கூட்டுறவு நிறுவனங்கள் உள்பட அனைத்து  பால் கூட்டுறவுத் துறையாலும் பாராட்டப்பட்டுள்ளன.

பால் உற்பத்தித் துறையில், பிராண்டட் அல்லது பிராண்டட் அல்லாத பால் மற்றும் பனீருக்கு வரி விலக்களிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நேரடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வெண்ணெய், நெய் மற்றும் அதுபோன்ற பொருட்களுக்கான வரி 12%-லிருந்து 5% ஆகவும், இரும்பு, எஃகு அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்ட பால் கேன்கள் மீதான வரி 12%-லிருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் பால் பொருட்களை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும். பால் விவசாயிகளுக்கு நேரடி நிவாரணம் வழங்கும். மேலும் பெண்கள் தலைமையிலான கிராமப்புற நிறுவனங்களை, குறிப்பாக பால் பதனப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள சுயஉதவிக் குழுக்களை வலுப்படுத்தும். மலிவு விலையில் பால் பொருட்கள் அத்தியாவசிய புரதம் மற்றும் கொழுப்பு ஆதாரங்களை வீடுகளுக்கு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்தும். மேலும் பால் உற்பத்தி துறையில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும்.

 

உணவு பதனப்படுத்துதல் மற்றும் வீட்டுப் பொருட்களில், சீஸ், நம்கீன்கள், வெண்ணெய் மற்றும் பாஸ்தா , ஜாம், ஜெல்லி, ஈஸ்ட், புஜியா மற்றும் பழக் கூழ் அல்லது சாறு சார்ந்த பானங்கள் மீது இப்போது 5% என வரி குறைக்கப்பட்டு ஒரு பெரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சாக்லேட்டுகள், சோளத் துண்டுகள், ஐஸ்கிரீம்கள், பேஸ்ட்ரிகள், கேக்குகள், பிஸ்கட் மற்றும் காபி ஆகியவற்றுக்கான வரியும் குறைந்துள்ளது.

 

குறைந்த ஜிஎஸ்டி வரிஉணவுப் பொருட்களுக்கான வீட்டுச் செலவினங்களைக் குறைக்கும். பகுதி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் தேவையைத் தூண்டும். மேலும் உணவு பதனப்படுத்துதல் மற்றும் பால் கூட்டுறவுத் துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது உணவு பதனப்படுத்துதல், பால் பதனப்படுத்துதல், கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணைகளை மேலும் அதிகரிக்கும்விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்.

1800 சிசிக்குக் குறைவான டிராக்டர்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது டிராக்டர்களை குறைந்த விலையில் வாங்க உதவும். பயிர் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பு மற்றும் கலப்பு விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த வரிக்குறைப்பு பயனளிக்கும். ஏனெனில் இந்த டிராக்டர்களை தீவனச் சாகுபடி, தீவனப் போக்குவரத்து மற்றும் பண்ணை விளைபொருட்களை மிகவும் திறமையாக நிர்வகிக்கப் பயன்படுத்தலாம்.

அம்மோனியா, சல்பூரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற முக்கிய உர உள்ளீடுகளுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயத் துறையில் உள்ள பல கூட்டுறவு சங்கங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.

இதேபோல், பன்னிரண்டு உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12%-லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. உயிரி அடிப்படையிலான உள்ளீடுகளை மிகவும் மலிவு விலையில் மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை இது ஊக்குவிக்கிறது. சிறந்த மண் வளம் மற்றும் பயிர் தரத்திற்காக ரசாயனத்திலிருந்து உயிரி பூச்சிக்கொல்லிகளுக்கு மாற விவசாயிகளை ஊக்குவிக்கிறது,

லாரிகள் மற்றும் டெலிவரி வேன்கள் போன்ற வணிகப் பொருட்கள் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28% லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் விநியோகச் சங்கிலியின் முதுகெலும்பாக இருக்கும் லாரிகளின் ஆரம்ப மூலதனச் செலவைக் குறைக்கிறது. இது சரக்குப் போக்குவரத்தை மலிவானதாக்கும். தளவாடச் செலவுகளைக் குறைக்கும்.

*****

(Release ID: 2164370)

AD/PKV/SG

 

 


(Release ID: 2164384) Visitor Counter : 2