பிரதமர் அலுவலகம்
தற்சார்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்த கட்டுரையை பகிர்ந்த பிரதமர்
Posted On:
05 SEP 2025 12:34PM by PIB Chennai
தற்சார்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் மையமான தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியத்துவம் குறித்து மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார் .
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
"மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்தியாவின் தற்சார்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய பயணத்தின் மையமான தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். பிரதமரின் இ-வித்யா, திக்ஷா மற்றும் ஸ்வயம் போன்ற தளங்களின் உதவியுடன் இன்றைய ஆசிரியர்கள் டிஜிட்டல் வகுப்பறைகள், செயற்கை நுண்ணறிவு , மாறிவரும் பாடத்திட்டங்கள் மற்றும் பல்வேறு கற்றல் தேவைகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள் என்று அவர் விளக்குகிறார்."
****
(Release ID: 2164125)
SS/PKV/SG
(Release ID: 2164222)
Visitor Counter : 3
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam