வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளூர் பொருட்களை வாங்க முன்வரவேண்டும் – திரு பியூஷ் கோயல்
Posted On:
04 SEP 2025 2:31PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் ஊட்டச்சத்து மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஊட்டச்சத்து தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, முன்எப்போதும் இல்லாத வகையில் நுகர்வு தேவைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்தார். இதன் மூலம் விற்பனை அதிகரிப்பதுடன், உற்பத்தியாளர்கள், நுகர்வோர். வர்த்தகர் என அனைத்துத் தரப்பினருக்கும் சாதகமான சூழல் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம் பெறும் பலன்களை நுகர்வோருக்கு வழங்க ஜிஎஸ்டி சீர்திருத்தம் வகை செய்வதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரத் தினத்தன்று பிரதமர் தீரு நரேந்திர மோடி ஆற்றிய உரையில், ஜிஎஸ்டி வரி அமைப்பில் மேற்கொள்ளப்படும் முக்கிய சீர்திருத்தங்கள் நாட்டு மக்களுக்கு பண்டிகை காலப் பரிசாக அமையும் என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அமைச்சர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் சரக்கு மற்றும் சேவைகளில் மிகப் பெரிய பயன்களை அளிப்பதாக அமையும் என்று கூறினார்.
ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பால் ஏற்படும் பயன்கள் நுகர்வோருக்கு வழங்கப்படுவதை தொழில்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதிய வரி விகிதங்களின்படி பல்வேறு வகையான பொருட்கள் மிகக் குறைந்த அளவிலான 5 சதவீத வரி விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அனைத்துத் துறையினருக்கும் குறிப்பிட்டதக்க அளவில் சேமிப்பை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் பொருட்களின் விலைகள் குறைவதுடன் நுகர்வும் அதிகரித்து விரைவான தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163661
----
SS/SV/KPG/KR/DL
(Release ID: 2163861)
Visitor Counter : 2