பிரதமர் அலுவலகம்
கர்மா பூஜையையொட்டி பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 SEP 2025 3:51PM by PIB Chennai
கர்மா பூஜையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக பழங்குடியினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சகோதர, சகோதரிக்கு இடையேயான பிரிக்க முடியாத அன்பின் அடையாளமான இந்த விழாவில், இயற்கை வழிபாடும், சிறப்பு வாய்ந்ததாகும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“கர்மா பூஜையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பிரிக்க முடியாத அன்பின் அடையாளமாகத் திகழும் இந்தப் பண்டிகையில் இயற்கை வழிபாடும் சிறப்பு வாய்ந்தது. இந்தப் புனிதத் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த அதிர்ஷ்டம் மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை அளிப்பதோடு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் ஊக்கமளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
***
(Release ID: 2163329)
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2163401)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam