பிரதமர் அலுவலகம்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2025 2:16PM by PIB Chennai
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எங்களது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும், நிவாரண உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது" என்று கூறியுள்ளார்.
***
(Release ID: 2162624)
AD/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2162726)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada