குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விநாயகர் சதுர்த்தியையொட்டி குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 26 AUG 2025 4:50PM by PIB Chennai

விநாயகர் சதுர்த்தியையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி  திரௌபதி முர்மு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இப்பண்டிகை மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுவதாகவும் ஞானம் மற்றும் நல்வாழ்வின் ஆதாரமாக ஸ்ரீ கணேஷ் வணங்கப்படுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  புதிய தொடக்கங்களுக்கும் தடைகளை களைவதற்கும் நாம் அவரது ஆசிகளைப் பெறுகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப் பண்டிகை புதிய இலக்குகள் மற்றும் நேர்மறையான மனப்பான்மையுடன் நம்மை முன்னேறிச் செல்ல உத்வேகம் அளிப்பதாகக் கூறியுள்ளார். 

நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். தூய்மையான, பசுமையான மற்றும் மேலும் வளமான நாட்டைக் கட்டமைக்க பங்களிப்போம் என்றும் குடியரசுத்தலைவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID:2160883)

AD/IR/KPG/SG/DL


(Release ID: 2160966)