பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விண்வெளியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது; சீர்திருத்தங்கள், இளைஞர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஊக்குவிக்கின்றன- பிரதமர் பெருமிதம்

Posted On: 23 AUG 2025 1:03PM by PIB Chennai

140 கோடி இந்தியர்களின் திறமை மற்றும் செயல்திறன்களால் இந்தியா விண்வெளி துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

நமது அரசு விண்வெளித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்றும், இது இளைஞர்கள், தனியார் துறை மற்றும் புத்தொழில்  நிறுவனங்கள்இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் புதிய வாய்ப்புகளை  ஊக்குவித்துள்ளது என்றும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

தேசிய விண்வெளி தினத்தைக் குறிக்கும் வகையில், வரும் ஆண்டுகளில் விண்வெளித் துறையில் நாடு இன்னும் பெரிய உயரங்களை எட்டும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்இந்தியாவின் விண்வெளிப் பயணத்தை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் திரு மோடி மீண்டும் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தின் சாதனைகள் மற்றும் இந்தியாவின் விண்வெளி புத்தொழில்  நிறுவனங்கள் பற்றிய MyGovIndia-ன் சமூக ஊடகப் பதிவுகளுக்கு பதிலளித்துள்ள திரு  மோடி கூறியிருப்பதாவது:

 

"140 கோடி இந்தியர்களின் திறன்களால் வலுவூட்டப்பட்டுநமது நாடு விண்வெளி துறையில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து  வருகிறது. மேலும், நாம் இன்னும் அதிகமாகச் செயல்படப் போகிறோம்!’’

"எங்கள் அரசு விண்வெளித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இளைஞர்கள், தனியார் துறை மற்றும் புத்தொழில்  நிறுவனங்கள், இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் வகையில்  புதிய வாய்ப்புகளை  ஊக்குவித்துள்ளது .

#தேசிய விண்வெளி தினம்"

****

 

(Release ID: 2160057)

AD/PKV/SG

 

 


(Release ID: 2160125)