பிரதமர் அலுவலகம்
அதிபர் மேக்ரானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடந்துவரும் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து இரு தலைவர்கலாம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் நிலையான ஆதரவை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்
இந்திய-பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்
Posted On:
21 AUG 2025 6:30PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியை பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடந்துவரும் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான தொடர் முயற்சிகள் குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையே வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்த கருத்துகளை அதிபர் மேக்ரான் பகிர்ந்து கொண்டார். காசாவின் நிலைமை பற்றிய தனது கண்ணோட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் இந்தியாவின் நிலையான ஆதரவை பிரதமர் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
வர்த்தகம், பாதுகாப்பு, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் தலைவர்கள் மதிப்பாய்வு செய்தனர். இந்தியா-பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், 2026-ம் வருடத்தை ‘புத்தாக்கத்தின் ஆண்டாக' பொருத்தமான முறையில் கொண்டாடவும் கூட்டு உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான ஆதரவையும் அதிபர் திரு மேக்ரான் தெரிவித்தார்.
அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து ஆலோசிக்க தலைவர்கள் இசைவு தெரிவித்தனர்.
***
AD/RB/DL
(Release ID: 2159570)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada