சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தி தவறு
Posted On:
21 AUG 2025 1:23PM by PIB Chennai
சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான செய்திகளை அடுத்து, அது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிப்பது தொடர்பாக பரிந்துரை ஏதுமில்லை என்றும் அது கூறியுள்ளது.
விதிமுறைகளின்படி கார், ஜீப், வேன் அல்லது இலகு ரக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், இலகு ரக வர்த்தக வாகனம், சிற்றுந்து, பேருந்து, லாரி உள்ளிட்ட பல்வேறு வகையான 4 அல்லது அதற்கு அதிகமான சக்கரங்களை உடைய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158942
***
AD/IR/AG/KR
(Release ID: 2159278)