பிரதமர் அலுவலகம்
சுபான்ஷு சுக்லாவுடனான பிரதமரின் உரையாடல்
Posted On:
19 AUG 2025 11:56AM by PIB Chennai
பிரதமர் – நீங்கள் அனைவரும் சிறப்பான பயணத்தை நிறைவு செய்து திரும்பியுள்ளீர்கள்…
சுபான்ஷு சுக்லா – ஆம், ஐயா.
பிரதமர் – சில மாறுபாடுகளை நீங்கள் அவசியம் உணர்ந்திருக்க வேண்டும். நான் கூறுவது குறித்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
சுபான்ஷு சுக்லா – ஐயா, நாங்கள் மேலே சென்ற போது வளி மண்டலமும், சுற்றுச்சூழலும் முழுவதுமாக வித்தியாசமாக இருந்தது. ஈர்ப்பு விசை இல்லை.
பிரதமர் – அதனால் இருக்கை ஏற்பாடு அப்படியே இருக்கிறதா?
சுபான்ஷு சுக்லா – ஆம், ஐயா. அப்படியேதான் உள்ளது
பிரதமர் – அந்த விண்வெளிக்குள் 23-24 மணி நேரங்கள் முழுதும் நீங்கள் செலவிட வேண்டும்
சுபான்ஷு சுக்லா – ஆம், ஐயா, நீங்கள் விண்வெளியை சென்றடைந்ததும் நீங்கள் உங்களை இருக்கையிலிருந்து விடுவித்து கொண்டு, பின்னர் நீங்கள் காப்ஸ்யூலுக்குள் மிதக்கலாம், நகரலாம் மற்றும் பிற பணிகளில் ஈடுபடலாம்.
பிரதமர் – உள்ளே போதிய அளவு இடம் உள்ளதா?
சுபான்ஷு சுக்லா – அதிகம் கிடையாது ஐயா, ஆனால் போதுமானதாக உள்ளது.
பிரதமர் – அதாவது உங்கள் போர் விமானத்தின் விமானி அறையை விட பெரிதா?
சுபான்ஷு சுக்லா – அதை விட பெரிது ஐயா. ஆனால் நாம் ஒரு முறை அங்கு சென்றடையும் போது பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு இதயத்துடிப்பு குறைகிறது. இம்மாற்றங்கள் நிகழ்ந்தாலும் நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் நமது உடல் அதற்கேற்ப மாறுகிறது. நீங்கள் அங்கு இயல்பாக இருக்கலாம். நீங்கள் திரும்பும்போது அதேபோன்ற மாற்றங்கள் மீண்டும் ஏற்படுகின்றன. எவ்வளவு தான் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் நீங்கள் திரும்பியதும் உடனடியாக நடக்க இயலாது. தனிபட்டமுறையில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்படவில்லை. நான் நன்றாக இருந்தேன். ஆனால் நான் முதலடி எடுத்து வைக்கும்போது நான் கீழே விழுந்தேன். அப்போது மற்றவர்கள் என்னை பிடிக்கவேண்டியிருந்தது. பிறகு இரண்டாவது அடி, மூன்றாவது அடி எடுத்துவைக்கும் போது நடக்க வேண்டும் என்பதை மனது அறிகிறது. தற்போது இது புதிய சூழல் என்பதை புரிந்துகொள்ள மூளைக்கு நேரம் தேவைப்படுகிறது.
பிரதமர் – அதனால் இது உடல் பயிற்சியால் நிகழ்வதல்ல. அதிகளவிலான மனப்பயிற்சியால் ஏற்படுகிறது அல்லவா?
சுபான்ஷு சுக்லா – ஆம், ஐயா, இது மனதின் பயிற்சி. உடலும், தசைகளும் வலிமையாக உள்ளன. ஆனால் மூளை மீண்டும் அதற்கு தயாராக வேண்டும். இது ஒரு புதிய சூழல் என்பதை மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு நடப்பதற்கு, இந்தளவிலான முயற்சி அல்லது வலிமை தேவைப்படும். அதை மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டும், ஐயா.
பிரதமர் – அங்கே அதிக காலம் இருந்தவர்கள் யார், எவ்வளவு காலம்?
சுபான்ஷு சுக்லா – ஐயா, தற்போது சிலர் சுமார் எட்டு மாதங்கள் வரை தொடர்ச்சியாக தங்கியுள்ளனர். இந்த திட்டத்துடன் தான் இந்த எட்டு மாத காலம் தொடங்கியுள்ளது.
பிரதமர் –நீங்கள் அங்கு சந்தித்தவர்களா…
சுபான்ஷு சுக்லா – ஆம், அவர்களில் சிலர் டிசம்பரில் திரும்ப உள்ளனர்.
பிரதமர் – பாசிப்பயறு, வெந்தயத்தின் சிறப்பு என்ன?
சுபான்ஷு சுக்லா – மிகவும் குறிப்பிடத்தக்கது, ஐயா. மக்கள் இந்த அம்சங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. செலவுமிகுந்த சரக்குகள் காரணமாக விண்வெளி நிலையத்தில் உணவு ஒரு பெரிய சவாலாகும். இடம் குறைவாக உள்ளது. அதிகபட்ச கலோரிகளையும் ஊட்டச்சத்தையும் சிறிய இடத்தில் வைப்பதற்கு எப்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அனைத்து வகையான ஆய்வுகளும் நடந்து வருகின்றன, ஐயா. இவற்றை வளர்ப்பது மிகவும் எளிது; விண்வெளி நிலையத்தில் அதிக வளங்கள் தேவையில்லை. ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அவற்றை விட்டு விடுங்கள். எட்டு நாட்களுக்குள் முளைகள் நன்றாகத் தோன்றத் தொடங்கும் ஐயா. அவை நிலையத்திலேயே வளர்வதை நான் பார்த்தேன். ஐயா, இவை நம் நாட்டின் ரகசியங்கள் என்று நான் கூறுவேன். நுண் ஈர்ப்பு விசை ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தவுடன், இவையும் அங்கு சென்றடைந்தன. யாருக்குத் தெரியும், இது நமது உணவுப் பாதுகாப்புப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடும். விண்வெளி வீரர்களுக்கு, இது நிலையத்தில் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அங்கு தீர்வு காணப்பட்டால், பூமியில் உணவுப் பாதுகாப்பு சவால்களைத் தீர்ப்பதிலும் இது நமக்கு உதவும், ஐயா.
பிரதமர் - இம்முறை ஒரு இந்தியர் அங்கு சென்றபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மற்றவர்கள் ஒரு இந்தியரைப் பார்த்தபோது என்ன உணர்ந்தார்கள்? அவர்கள் என்ன கேட்டார்கள், என்ன பேசினார்கள்?
சுபான்ஷு சுக்லா - ஆம், ஐயா. கடந்த ஒரு ஆண்டாக எனது தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால், நான் எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும், அவர்கள் என்னைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், பேசுவதில் மிகவும் உற்சாகமாக இருந்தனர், நாங்கள் என்ன செய்கிறோம், எப்படி செயல்படுகிறோம் என்று கேட்டார்கள். மிக முக்கியமாக, விண்வெளித் துறையில் பாரதத்தின் முன்னேற்றம் பற்றி அனைவருக்கும் தெரியும். ககன்யானைப் பற்றி அறிய என்னை விட பலர் உற்சாகமாக இருந்தனர். ஐயா. எங்கள் பணி எப்போது தொடங்கப்படும் என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். உண்மையில், எனது குழுவினர் ககன்யான் ஏவப்படும் போது, நான் அவர்களை அழைக்க வேண்டும், அவர்கள் நமது வாகனத்தில் அமர வேண்டும் என்று கூறி எனது கையொப்பத்தையும் கூட பெற்றனர். ஐயா, நான் இதில் மிகப்பெரிய உற்சாகத்தை உணர்கிறேன்.
பிரதமர் – உங்களை அவர்கள் தொழில்நுட்ப அறிவாளி என்று அழைத்தார்களே, அதற்கான காரணம் என்ன?
சுபான்ஷு சுக்லா - இல்லை, ஐயா. அவர்கள் அன்பாக அப்படி கூறினார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், ஐயா, விமானப்படையில் எனது பயிற்சியும், பின்னர் பயிற்சி விமானியாகப் பெற்ற பயிற்சியும் மிகவும் கடுமையானதாக இருந்தது. நான் விமானப்படையில் சேர்ந்தபோது, நான் அதிகம் கற்க வேண்டியதில்லை என்று நினைத்தேன். ஆனால் பின்னர் நான் நிறைய படிக்க வேண்டியிருந்தது. பயிற்சி விமானியான பிறகு, அது நடைமுறையில் ஒரு பொறியியல் துறையைப் போன்று இருந்தது. எங்களுக்கும் மேலும் பயிற்சி அளிக்கப்பட்டது. நமது விஞ்ஞானிகள் இரண்டு, மூன்று, நான்கு ஆண்டுகள் கூட எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். எனவே, ஐயா, இந்த பணிக்குச் சென்றபோது நாங்கள் மிகவும் தயாராக இருந்தோம் என்று நினைக்கிறேன்.
பிரதமர் - நான் உங்களுக்கு அளித்த வீட்டுப்பாடம் - அதில் நீங்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள்?
சுபான்ஷு சுக்லா - மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஐயா. பின்னர் மக்கள் என்னை பார்த்து நிறைய சிரித்தனர். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் என்னைக் கேலி செய்து, உங்கள் பிரதமர் உங்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தார் என்று கூட சொன்னார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இதை நாம் உணர வேண்டியது மிகவும் அவசியம், அதனால்தான் நான் சென்றேன். பணி வெற்றிகரமாக இருந்தது, ஐயா, நாங்கள் திரும்பிவிட்டோம். ஆனால் இந்த பணி நிறைவு அல்ல, இது தொடக்கம்.
பிரதமர் – அதைத்தான் நானும் அன்று சொன்னேன்.
சுபான்ஷு சுக்லா – ஆமாம், ஐயா, நீங்கள் அன்று கூறினீர்கள்...
பிரதமர் – இது நமது முதல் படி
சுபான்ஷு சுக்லா – உண்மையில் ஐயா முதலாவது படி, இதன் மூலம் எவ்வளவு நாம் கற்று கொண்டு அதை நாம் திரும்ப எடுத்துவந்துள்ளோம் என்பது இந்த முதல் படியின் முக்கிய நோக்கமாகும்.
பிரதமர் - பாருங்கள், நம் முன் உள்ள மிக முக்கியமான பணி, விண்வெளி வீரர்களின் ஒரு பெரிய குழுவை உருவாக்குவதுதான். நம்மிடம் 40-50 பேர் தயாராக இருக்க வேண்டும். தற்போது வரை, மிகச் சில குழந்தைகளே இதை மதிப்புமிக்க ஒன்று என்று நினைத்திருக்கலாம். ஆனால் உங்கள் பயணத்திற்குப் பிறகு, ஒருவேளை நம்பிக்கை வலுவடையும், அதன் மீதான ஈர்ப்பும் பெரிதும் அதிகரிக்கும்.
சுபான்ஷு சுக்லா - ஐயா, நான் குழந்தையாக இருந்தபோது, ராகேஷ் சர்மா அவர்கள் 1984-ல் விண்வெளிக்குச் சென்றார். ஆனால் அப்போது விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றவே இல்லை, ஏனென்றால் நம்மிடம் எந்த திட்டமும் இல்லை, எதுவும் இல்லை, ஐயா. ஆனால் இந்த முறை, நான் விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, நான் குழந்தைகளுடன் மூன்று முறை உரையாடினேன். ஒரு நேரடி நிகழ்வில் ஒரு முறை, மற்றும் இரண்டு முறை வானொலி மூலம். மேலும், மூன்று நிகழ்வுகளிலும், ஐயா, நான் எப்படி விண்வெளி வீரராக முடியும்? என்று ஒரு குழந்தையாவது கேட்கும் ஐயா, இது நம் நாட்டிற்கு ஒரு பெரிய வெற்றி என்று நான் நினைக்கிறேன், ஐயா, தற்கால பாரதத்தில், குழந்தை வெறும் கனவு காணவில்லை, அது சாத்தியம், ஒரு வழி இருக்கிறது, உண்மையில் அவர்களும் ஒரு விண்வெளி வீரராக மாற முடியும். நீங்கள் சொன்னது போல், ஐயா, தற்போது அது என் பொறுப்பு. என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குப் பெரும் கடமை என்று நினைக்கிறேன், இப்போது முடிந்தவரை பலரை இந்த நிலையை எட்ட உதவுவது எனது கடமையாகும்.
பிரதமர் – தற்போது விண்வெளி நிலையம் மற்றும் ககன்யான்…
சுபான்ஷு சுக்லா – ஐயா!
பிரதமர் – இவை நமது இரண்டு மிகப்பெரிய திட்டங்கள்…
சுபான்ஷு சுக்லா – ஐயா!
பிரதமர் – உங்களுடைய அனுபவம் மிகவும் மதிப்புடையதாக இருக்கும்.
சுபான்ஷு சுக்லா – நானும் அப்படியே நம்புகிறேன் ஐயா. குறிப்பாக, உங்கள் தலைமையில் நமது அரசு விண்வெளித் திட்டத்திற்குக் காட்டிய அர்ப்பணிப்பு காரணமாக தோல்விகள் ஏற்பட்டபோதிலும் ஆண்டுதோறும் நிலையான நிதியுதவியை வழங்குகிறது. உதாரணமாக, ஐயா, சந்திரயான்-2 வெற்றிபெறவில்லை, ஆனால் நாங்கள் முன்னேறுவோம் என்று சொன்னோம், சந்திரயான்-3 வெற்றி பெற்றது. தோல்விகளுக்குப் பிறகும், அத்தகைய ஆதரவு இருந்தால், முழு உலக நாடுகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நிச்சயமாக, ஐயா, இந்தத் துறையில் தலைமைப் பொறுப்பை பெறுவதற்கான திறனும், சாத்தியக்கூறும் நமக்கு உள்ளது. ஆனால் மற்ற நாடுகளின் பங்கேற்புடன் பாரதத்தின் தலைமையில் ஒரு விண்வெளி நிலையம் இருந்தால், அது மிகவும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கலாம். விண்வெளி உற்பத்தியில் தற்சார்பு இந்தியா குறித்த உங்களுடைய கருத்துகளையும் நான் கேட்டேன், ஐயா. இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. ககன்யான், பாரத விண்வெளி நிலையம், மற்றும் சந்திரனில் தரையிறங்குவது பற்றி நீங்கள் அளித்த தொலைநோக்குப் பார்வை உண்மையில் ஒரு சிறந்த கனவு, ஐயா.
பிரதமர் - இதை நாம் தன்னம்பிக்கையுடன் நிறைவேற்றினால், அது மிகவும் நன்றாக இருக்கும்.
சுபான்ஷு சுக்லா - நிச்சயமாக, ஐயா.
சுபான்ஷு சுக்லா - விண்வெளியில் இருந்து பாரதத்தின் பல புகைப்படங்களை எடுக்க முயற்சித்தேன், ஐயா. பாரதம் இங்குதான் தொடங்குகிறது. இந்த முக்கோணம் பெங்களூரு, ஐயா. இது ஐதராபாத். நீங்கள் இதை காண்பது மின்னலாகும். இந்த பகுதி மலைகளால் நிறைந்துள்ளது. நாங்கள் கடந்து வந்த இந்த இருண்ட பகுதி இமயமலை., ஐயா, மேலே அவை அனைத்தும் நட்சத்திரங்கள், நாங்கள் கடந்து செல்லும்போது, சூரியன் பின்னால் உதித்துக் கொண்டிருந்தது, ஐயா.
***
(Release ID: 2157793 )
AD/IR/AG/DL
(Release ID: 2158109)