பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் உரையாடினார்

प्रविष्टि तिथि: 18 AUG 2025 8:09PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணத்தை குறிக்கும் வகையில் ஒரு பயனுள்ள உரையாடலை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது, திரு. சுக்லாவின் விண்வெளி அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றங்கள் மற்றும் நாட்டின் லட்சிய திட்டமான   விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் - ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

 

எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

 

“சுபான்ஷு சுக்லாவுடன் ஒரு சிறப்பான உரையாடல் நடைபெற்றது. விண்வெளியில் அவரது அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலான முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் லட்சிய ககன்யான் திட்டம் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது.”

***

AD/SM/ DL


(रिलीज़ आईडी: 2157748) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam