உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான செயல்திட்டமாக அமைந்துள்ளது - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 15 AUG 2025 4:40PM by PIB Chennai

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை, கடந்த 11 ஆண்டுகளின் முன்னேற்றத்தையும், நிகழ்காலத்தின் வலிமையையும், வளமான வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான செயல்திட்டத்தையும் கொண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாதிகளை ஒழித்த நடவடிக்கை, சுதர்சன் சக்ரா இயக்கத்தின் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான திட்டம், 'உயர் சக்தி வாய்ந்த மக்கள்தொகை இயக்கம்' மூலம் ஊடுருவல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாடு போன்றவை பிரதமரின் உரையில் இடம்பெற்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தேசத்தை வலிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். விவசாயிகளின் நலன்களுக்கு அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அணுசக்தி, முக்கிய கனிமங்கள், எரிசக்தி, விண்வெளித் துறை, ஜெட் இன்ஜின்கள் போன்றவற்றில் தற்சார்பு போன்ற அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.   வரவிருக்கும் தீபாவளியின் போது ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படுவது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி, சிறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின உரையில், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) 100 ஆண்டுகால வரலாற்றையும் பங்களிப்புகளையும் பாராட்டியதாகவும், நாட்டின் 100 ஆண்டுகால முன்னேற்றப் பயணத்தில் இணையற்ற பங்களிப்புகளைச் செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறியிருப்பதாக திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். கடந்த நூறு ஆண்டுகளாக, சேவை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனிநபர் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஆர்எஸ்எஸ் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.

***

(Release ID: 2156863)
AD/PLM/RJ

 


(Release ID: 2157141)