பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் ரூ.8146 கோடி ஒதுக்கீட்டில் 700 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
12 AUG 2025 3:29PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் ரூ.8146 கோடி ஒதுக்கீட்டில் 700 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்உற்பத்தி திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (12 ஆகஸ்ட் 2025) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை 72 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன், அருணாச்சலப் பிரதேச அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நிறைவேற்றப்படும். இந்த மாநிலத்தின் சமபங்கு பகிர்வுக்கான மத்திய அரசு நிதியுதவி ரூ.436.13 கோடி தவிர மின்சாரம் கொண்டு செல்லப்படும் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்திற்காக ரூ.458.79 கோடி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155471
***
AD/SMB/AG/DL
(Release ID: 2155751)
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam