பிரதமர் அலுவலகம்
காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு முதல் சரக்கு ரயில் வருகைக்கு பிரதமர் பாராட்டு, இது வர்த்தகம் மற்றும் இணைப்புக்கு ஒரு நன்னாள் என்று பெருமிதம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2025 6:04PM by PIB Chennai
காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு முதல் சரக்கு ரயில் வருகையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது பிராந்தியத்தை தேசிய சரக்கு கட்டமைப்புடன் இணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவின் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர், இந்த வளர்ச்சி ஜம்மு காஷ்மீரில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது கூறியிருப்பதாவது;
“ஜம்மு காஷ்மீரில் வர்த்தகம் மற்றும் இணைப்புக்கு ஒரு நன்னாள்! இது முன்னேற்றத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.”
*****
(Release ID: 2154693)
AD/SM/PKV/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2154721)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam