தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

Posted On: 07 AUG 2025 10:35AM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 7, 2025) வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

(அ) வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21, 2025.

(ஆ) வேட்புமனுக்களை பரிசீலிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 22, 2025.

(இ) வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25, 2025 மற்றும்

(ஈ) தேவைப்பட்டால், செப்டம்பர் 9-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும்.

தேர்தல் ஆணையம் கடந்த மாதம் (ஜூலை 25, 2025) வெளியிட்டுள்ள தனித்தனி அறிவிப்புகளில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு. பி.சி. மோடியையும், இணைச் செயலாளர் திருமதி. கரிமா ஜெயின், மாநிலங்களவைச் செயலக இயக்குநர் திரு. விஜய் குமார் ஆகியோர் உதவித் தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத்தலைவர் தேர்தல், 2025-க்கான  நடைமுறை தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு, தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவை பொதுச் செயலாளருமான திரு. பி.சி. மோடியிடம், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்குள் (பொது விடுமுறை நாட்கள் தவிர) சனிக்கிழமைகள் உட்பட அனைத்து வேலை நாட்களிலும், அதாவது ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16, 2025 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153419

***

AD/SM/SV/SG/KR

 


(Release ID: 2153453)