பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) இம்மாதம் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்
பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இணைந்து திறன் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கூட்டு ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகள் இந்தப் புதிய கட்டடத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது
இந்தப் புதிய கட்டடம் நவீன நிர்வாக செயல்பாடுகளுக்கான முன்மாதிரியான கட்டடமாகத் திகழும்
சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை ஊக்குவிக்கும் வகையில் பூஜ்யம் உமிழ்விலான கழிவு மேலாண்மை, திடக்கழிவு நடைமுறைகள் மற்றும் மறுசுழற்சிக்கான வசதிகளுடன் கூடிய வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது
எரிசக்தித் திறன் மற்றும் நீர் மேலாண்மையைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது
Posted On:
04 AUG 2025 5:44PM by PIB Chennai
தில்லியில் உள்ள கடமைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பதிய கடமை மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனையடுத்து கடமைப்பாதையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
இந்தப் புதிய கட்டடம் நவீன வசதிகள், எரிசக்தித் திறன் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய கட்டடம் திறக்கப்பட உள்ளது. நிர்வாக நடைமுறைகளை சீரமைக்கும் வகையிலும் உறுதியான நிர்வாகத்தை வழங்கும் வகையிலும் மத்திய செயலகத்தின் பல்வேறு பொதுப் பிரிவுகளின் அலுவலக செயல்பாடுகள் முதல் முறையாக இந்தப் புதிய கட்டடத்தில் கொண்டுவரப்பட உள்ளது.
இந்தத் திட்டம் மத்திய அரசின் விரிவான நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு அம்சமாகும். பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைத்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் மத்திய செயலகத்தின் பொது நிர்வாகத்திற்கான அமைச்சகங்களுக்கு இடையேயான செயல்பாடுகளை மேம்படுத்துதல், மத்திய அரசின் கொள்கை செயலாக்கத்தை விரைவுப்படுத்துதல் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான சூழல் அமைப்பை ஏற்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது, 1950-ம் ஆண்டு மற்றும் 1970-ம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள சாஸ்திரி பவன், கிரிஷிபவன், உத்யோக் பவன் மற்றும் நிர்மாண் பவன் போன்ற பழைய கட்டடங்களில் இயங்கி வரும் பல்வேறு முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் இந்தப் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டடத்தில் பழுது மற்றும் பராமரிப்புகளுக்கான செலவுகள் குறைவதுடன் விரைவான செயல்திறன், பணியாளர்களுக்கான நலன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடமை மாளிகை எனப்படும் இந்தப் புதிய கட்டடத்தின் வடிவமைப்பு கட்டடக்கலையின் திறன், புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தில்லியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வகை செய்கிறது. 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அடித்தளங்களுடன் 7 அடுக்குகளாக (தரைதளம் + 6 அடுக்குகள் ) இந்தப் புதிய கட்டடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், ஊரக மேம்பாட்டுத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகிய துறைகள் இந்தப் புதிய கட்டடத்தில் செயல்பட உள்ளன.
இந்தப் புதிய கட்டடம் நவீன நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் தேவைக்கு ஏற்ற தகவல் தொழில்நுட்ப தயார் நிலையை எடுத்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பணியிடங்கள், அடையாள அட்டை அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள், ஒருங்கிணைந்த மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் மையப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஆகிய அம்சங்கள் உள்ளன. நான்கு தரநிலையை இலக்காகக் கொண்டு நிலைத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டடத்தில் இரட்டைக் கண்ணாடி அமைப்புடன் கூடிய முகப்புத் தோற்றம் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தித் தகடுகள், சூரிய மின்சக்தியில் இயங்கும், நீர் சூடேற்றும் சாதனம், நவீன வெப்பத்தடுப்பு காற்று வசதி, மற்றும் குளிர்சாதன வசதிகள், மழைநீர் சேகரிப்பு போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நிகர பூஜ்ய உமிழ்வை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவு மேலாண்மையை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகள் வளாகத்திற்குள் திடக்கழிவு மேலாண்மை, மறுசுழற்றி செயல்பாடுகள், மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் வசதிகள், கட்டுமானப் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான வசதிகள் போன்றவையும் இதில் உள்ளன.
பூஜ்ய உமிழ்வு கொண்ட வளாகமாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டடத்தில் கழிவு நீரை, மறுசுழற்சி செய்து சுத்திகரிப்பதற்கான வசதிகளும், தண்ணீர் பற்றாக்குறை இல்லாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்கள் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், வெளிப்புறத் தரைதளங்கள், தரையின் மேற்புறத்தில் உள்ள மண்வளத்தைப் பயன்படுத்தி இலகுரக உலர் தடுப்புகள் மற்றும் கட்டுமான சுமை, திடக்கழிவு மேலாண்மை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடம் எரிசக்திப் பயன்பாட்டை 30 சதவீதம் அளவிற்கு குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற சத்தத்தைக் குறைக்கும் வகையிலும், உட்புறத்தில் குளிர்ந்த சூழல் நிலவும் வகையிலும், சிறப்பு வகைக் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எரிசக்தி சேமிப்பை உறுதி செய்யும் வகையில் எல்இடி விளக்குகள், உணர்திறன் நுட்பத்துடன் கூடிய சுவிட்சுகள், நவீன மின் தூக்கிகள் போன்ற வசதிகளும் உள்ளன. மின்சாரத்தை சேமிக்கும் வகையில் நவீன முறையிலான மின்சாரப் பயன்பாட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. கர்த்தவிய பவன் 3-ன் மேற்கூரையில் சூரிய சக்திக்கான தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு தோறும் 5.34 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தண்ணீர் தேவைகளைக் கருத்தில் கொண்டு சூடான தண்ணீருக்கான சூரிய சக்தி நீர் சூடேற்றும் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
***
(Release ID: 2152193)
AD/SV/KPG/DL
(Release ID: 2152288)