பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கான சிறப்பு பதிவு முகாம் 2025, ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 04 AUG 2025 3:13PM by PIB Chennai

பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கான சிறப்பு பதிவு முகாமை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2025, ஆகஸ்ட் 15 வரை நீட்டித்துள்ளது. அ ங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் தலைமையில் இந்த முகாம் வாயிலாக வீடு வீடாக சென்று தகுதியுடைய கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த இயக்கத்தின் கீழ் உரிய நேரத்தில் அவர்கள் பதிவு செய்வதை உறுதி செய்வது நோக்கமாகும்.  பெண் குழந்தைகள் குறித்து நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துவதுடன் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அளிப்பதற்கும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.

முதல் குழந்தை பிரசவத்திற்கு முன்பும், அதன் பிறகும் அவர்கள் ஓய்வெடுக்க உதவும் வகையில் ஊதிய இழப்பில் பகுதி அளவு இழப்பீடாக பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரொக்கமாக உதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2025 ஜூலை 15 வரை 4.05 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்கு 19,028 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முதல் குழந்தை பிறந்த பிறகு 2 தவணைகளாக ரூ.5000, இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஒரு தவணையாக ரூ.6000-மும் வழங்கப்படுகிறது.

***

(Release ID: 2152087)

AD/IR/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2152279) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Kannada , Malayalam