பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களை 127 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவந்ததற்கு பிரதமர் வரவேற்பு

Posted On: 30 JUL 2025 2:44PM by PIB Chennai

பகவான் புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு இது பெருமை சேர்ப்பதாகவும், இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சியே லட்சியம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் பகவான் புத்தரின் போதனைகள் மீது இந்தியா கொண்டிருக்கும் ஆழ்ந்த மரியாதையையும், அதன் ஆன்மீக மற்றும் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதவிட்டிருப்பதாவது:

"நமது கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு மகிழ்ச்சியான நாள்!

பகவான் புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களை 127 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் கொண்டு வந்திருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும். இந்த புனித நினைவுச்சின்னங்கள் பகவான் புத்தருடனும் அவரது உன்னத போதனைகளுடனும் இந்தியாவின் நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன. நமது புகழ்பெற்ற கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பாதுகாப்பதற்கும் நமது உறுதிப்பாட்டை இது விளக்குகிறது. #VikasBhiVirasatBhi"

"பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 1898-ம் ஆண்டு கண்டறியப்பட்டன என்றும் ஆனால் காலனித்துவ காலத்தில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன என்பதை நினைவுகூரமுடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவை சர்வதேச ஏலத்தில் இடம் பெறச் செய்த போது, அவை தாயகம் கொண்டு வருவதை உறுதிசெய்ய நாங்கள் உழைத்தோம். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்."

***

(Release ID: 2150093)

AD/SV/SG/KR/DL


(Release ID: 2150399)