உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி 2025 ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Posted On: 30 JUL 2025 11:07AM by PIB Chennai

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் பரிந்துரைப்பதற்குமான கடைசி தேதி 2025 ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது ஜூலை 31 ஆக இருந்தது. இதற்கான பரிந்துரைகள் தேசிய விருது தளத்தில் (https://awards.gov.in ) மட்டுமே பெறப்படும் முடியும்.  பத்ம விருதுகள் 2026-க்கான பரிந்துரைகள் நடைமுறை 2025 மார்ச் 15 அன்று தொடங்கியது. இவ்விருதுகளை பெறுவோர் குறித்த விவரங்கள் 2026 குடியரசுத் தினம் அன்று  அறிவிக்கப்படும்.

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய நாட்டின் உயரிய குடிமைப்பணி விருதுகள் 1954-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இது குறித்த  விவரங்களை (https://mha.gov.in) என்ற உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் (https://padmaawards.gov.in) என்ற பத்ம விருதுகள் இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150032

***

AD/IR/KPG/KR/DL


(Release ID: 2150391)