தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        பிஎஸ்என்எல் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                28 JUL 2025 2:44PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமைப் பொது மேலாளர்களுடன், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா புதுதில்லியில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தின் போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி, மண்டல அளவில் உள்ள சவால்கள் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்துவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மக்களை மையமாகக் கொண்டு சேவைகளை வழங்குதல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பின் போது திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். இலக்குகளை எட்டுவதிலும், அதிக வருவாய் ஈட்டுவதிலும் பிஎஸ்என்எல் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். 
இந்தக் கூட்டத்தில் தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர், அமைச்சகத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
***
(Release ID: 2149231)
AD/PLM/AG/KR
                
                
                
                
                
                (Release ID: 2149312)
                Visitor Counter : 29