தேர்தல் ஆணையம்
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல்
Posted On:
23 JUL 2025 1:08PM by PIB Chennai
இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஜுலை 22, 2025 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எஸ்.ஓ.3354(இ) மூலம் அறிவிக்கை செய்துள்ளது.
இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலானது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952 மற்றும் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் விதிகள், 1974 ஆகியவற்றின்கீழ் நடத்தப்படுகின்றது.
இதற்கேற்ப, இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டது. ஏற்பாடுகள் முடிவடைந்த பிறகு குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அட்டவணை கூடிய விரைவில் வெளியிடப்படும். மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தும் அதிகாரி/ உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. முந்தைய அனைத்து குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவர் தேர்தல்கள் குறித்த பின்புலத் தகவல்கள் தொகுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
***
(Release ID: 2147164)
VL/TS/DL
(Release ID: 2147476)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam