பிரதமர் அலுவலகம்
இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
Posted On:
23 JUL 2025 1:06PM by PIB Chennai
ஜூலை 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக செல்கிறேன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா - இங்கிலாந்து நாடுகள் இடையே அண்மை ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதற்கான ஒரு விரிவான உத்திசார் ஒத்துழைப்பு குறித்து பரஸ்பரம் இரு நாடுகளும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார். இந்த கூட்டு நடவடிக்கைகள் இருதரப்பு வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தனது இந்த பயணத்தின் போது, அந்நாட்டுப் பிரதமர் திரு கீர் ஸ்டார்மறை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், இரு நாடுகளிடையே வளமை, மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குது தொடர்பான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் மேம்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் போது அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் - ஐ சந்திப்பதற்காக தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக, மாலத்தீவு செல்லும் அவர் அந்நாட்டு 60 - வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் டாக்டர் முகமது முய்சு விடுத்துள்ள அழைப்பின் பேரில் தாம் மாலத்தீவு செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இந்தியா - மாலத்தீவு நாடுகளிடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 - வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் டாக்டர் முகமது முய்சு மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் நல்ல பலன்களை அளிப்பதுடன், மக்களுக்கும் பயனுள்ளதாகவும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைக்கும் வலுசேர்க்கும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
----
(Release ID 2147161)
VL/SV/KPG/KR
(Release ID: 2147361)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam