எஃகுத்துறை அமைச்சகம்
ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டத்திற்கு 31,000 டன்களுக்கும் அதிகமான எஃகு விநியோகம் செய்த செயில் நிறுவனம்
Posted On:
21 JUL 2025 12:54PM by PIB Chennai
நாட்டின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணையமானது (செயில்) ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டத்திற்கு மிகப்பெரிய எஃகு விநியோகஸ்தராக செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை கட்டுமான திட்டம் இந்தியாவின் மிக நீளமான சாலைவழி சுரங்கப்பாதையாகவும், ஆசியாவின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையாகவும் உருவெடுக்க உள்ளது.
இந்த உத்திசார் உள்கட்டமைப்பு திட்டத்தில் செயில் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. டி.எம்.டி. கம்பிகள், தகடுகள் உட்பட 31,000 டன்களுக்கும் அதிகமான எஃகை இந்த நிறுவனம் விநியோகித்துள்ளது. மேலும் 2027-ம் ஆண்டு நிறைவடைய இருக்கும் இந்த திட்டத்திற்கு, தொடர்ந்து எஃக்கை விநியோகம் செய்ய உள்ளது. ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டத்திற்கான செயில் அமைப்பின் பங்களிப்பு அதன் நீண்டகால தேச கட்டுமானப் பணிகளை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டம் இமயமலைப் பகுதியில் 11,578 அடி உயரத்தில் சவாலான நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ட்ராஸ் – கார்கில் வழித்தடத்தில் ஸ்ரீநகர் மற்றும் லேக் இடையே 30 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் அனைத்து விதமான வானிலைக்கும் ஏற்ற வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு முக்கிய நிலையாக அம்சமாக உள்ள இந்த சுரங்கப்பாதை, ஸ்ரீநகர், கார்கில் பகுதி பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
***
AD/TS/GK/LDN/AG
(Release ID: 2146373)