பிரதமர் அலுவலகம்
கொரியக் குடியரசு அதிபரின் சிறப்பு தூதர்கள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
Posted On:
17 JUL 2025 8:35PM by PIB Chennai
திரு கிம் பூ கியூம் தலைமையிலான கொரியக் குடியரசு அதிபரின் தூது குழுவினர், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின் போது கடந்த ஜூன் மாதம் நடைவெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது அந்நாட்டு அதிபர் திரு லீ ஜே மியூங்கை சந்தித்துப் பேசியதை நினைவுகூர்ந்த பிரதமர், அந்நாட்டு உயர்நிலை பிரதிநிதிகள் குழுவை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது அந்நாட்டு பிரதிநிதிகள் குழுத்தலைவர் திரு கிம், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறினார். அந்நாட்டு அதிபர் தெரிவித்த வாழ்த்துகளையும் பிரதமர் திரு மோடியிடம் தாம் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பு, முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறையில் வளர்ச்சி கண்டு வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, தொழில்நுட்பம், கப்பல் கட்டுமானம், பாதுகாப்பு, மின்னணு சாதனங்கள், பசுமை ஹைட்ரஜன், மின்கலன் உற்பத்தி போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள திறன் வாய்ந்த மனித வளம், மற்றும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதால் இவ்விரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.
இரு நாடுகளிடையேயான நல்லுறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதில், உறுதியுடன் பணியாற்ற விரும்புவதாக அவர் கூறினார்.
கொரிய தூதர் குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் திரு லீ ஜே மியூங்கின் இந்தியப் பயணத்தை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
----
(Release ID:2145697)
AD/TS/SV/KPG/RJ
(Release ID: 2145742)
Visitor Counter : 3
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam