பிரதமர் அலுவலகம்
திறன் இந்தியா இயக்கம் மூலம் திறமையான மற்றும் தன்னிறைவு பெற்ற இளைஞர் சக்தியை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்
Posted On:
15 JUL 2025 9:14PM by PIB Chennai
திறன் இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், இந்த இயக்கத்தின் மூலம் திறமையான மற்றும் தற்சார்புடைய இளைஞர் சக்தியை உருவாக்குவதற்கான அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார். திறன் இந்தியா இயக்கம் நாடு முழுவதும் மில்லியன் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று அவர் குறிப்பிட்டார்.
மைகவ்இந்தியா மற்றும் மத்திய அமைச்சர் திரு. ஜெயந்த் சிங்கின் எக்ஸ் தள பதிவுகளுக்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:
“திறன் இந்தியா, நமது இளைஞர்களை திறமையானவர்களாகவும் சுயசார்புடையவர்களாகவும் மாற்றுவதற்கான உறுதியை வலுப்படுத்துகிறது.
#SkillIndiaAt10”
"திறன் இந்தியா முன்முயற்சி எண்ணற்ற மக்களுக்கு பயனளித்துள்ளது, புதிய திறன்கள் மற்றும் உருவாக்க வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது. வரும் காலங்களிலும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, நமது இளைஞர் சக்தியை புதிய திறன்களால் சித்தப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம், இதன் மூலம் நமது வளர்ந்த பாரதம் கனவை நனவாக்க முடியும்.
#SkillIndiaAt10"
***
AD/RB/DL
(Release ID: 2145056)
Visitor Counter : 5
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam