தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அனிமேஷன், விஷூவல் எஃபெட்க்ஸ் உள்ளிட்ட காட்சித் தொழில்துறை சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிவிப்பு
Posted On:
15 JUL 2025 11:16AM by PIB Chennai
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் முதல் தொகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த நிறுவனம் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், விரிச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப துறைகளில் தொழில் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை தொடங்குகிறது.
2025 மே மாதம் நடைபெற்ற உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் இந்த நிறுவனம் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.
முதல் தொகுப்புக்கான தொடக்கக் கல்விச் சலுகையாக கேமிங்கில் ஆறு சிறப்பு படிப்புகளுக்கும் திரைப்பட போஸ்ட் புரொடக்ஷன் துறையில் 4 படிப்புகளும், ஆனிமேஷன் காமிக்ஸ் மற்றும் விரிச்சுவல் ரியாலிட்டி துறைகளில் 8 படிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
வளர்ந்துவரும் படைப்பு தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதை உறுதிசெய்ய முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பாடத் திட்டங்கள் மிகவும் கவனமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரிட்டனைச் சேர்ந்த யார்க் பல்கலைக்கழகத்துடன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சர்வதேச அளவிலான கூட்டு ஆராய்ச்சி, ஆசிரியர் பரிமாற்றம் உலகளாவிய சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
மேலும் கூகுள், யூடியூப், அடோப், மெட்டா, மைக்ரோ சாஃப்ட், என்விடியா, ஜியோ ஸ்டார் உள்ளிட்ட முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் நீண்ட கால ஒத்துழைப்பு வழங்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் உறுதி அளித்துள்ளன. அந்த நிறுவனங்களின் ஆதரவு மூலம் பாடத்திட்ட மேம்பாடு, உதவித் தொகை, பணிக்கால பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இது குறித்து பேசிய இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு விஸ்வாஸ் தியோஸ்கர், உலகத்தரம் வாய்ந்த திறமையாளர்களை உருவாக்குவதன் மூலம் அனிமேஷன் கிராஃபிக்ஸ் துறையில் இந்தியாவை உலகளவில் சக்தி வாய்ந்த மையமாக மாற்றுவதே தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.
உலகளவிலான தரநிலையை பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான பாடத்திட்டம் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144760
***
AD/TS/SM/GK/AG/KR
(Release ID: 2144814)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam