ரெயில்வே அமைச்சகம்
மகாராஷ்டிராவின் புல்லட் ரயில் திட்டத்தில் கடலுக்கு அடியில் முதலாவது சுரங்கப்பாதை பிரிவு திறக்கப்பட்டது
Posted On:
14 JUL 2025 4:02PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு பெரும் சாதனையாக பாந்த்ரா குர்லா வளாகம் (பிகேசி) – தானே இடையே 21 கி.மீ. தூரத்திற்கான பிரிவில் கடலுக்கு அடியில் முதலாவது சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தத் திட்டத்தில் 310 கி.மீ. பாதை அமைப்பு நிறைவடைந்தது. தண்டவாளங்கள் அமைத்தல், மின்சார வயர்கள் பொருத்துதல், ரயில் நிலையங்கள், பாலங்கள் கட்டமைத்தல் போன்ற பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்தியா- ஜப்பான் கூட்டாண்மையில் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தில் இ-10 ஷிங்கன்சென் ரயில்களை இயக்க ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 508 கி.மீ. தொலைவுள்ள இந்த வழித்தடம் முழுவதும் ஷிங்கன்சென் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. இந்த வழித்தடம் வேகம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு புதிய குறியீடாக அமையும்.
310 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் 15 ஆற்றுப் பாலங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 4 ஆற்றுப் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 12 ரயில் நிலையங்களில் 5 ரயில் நிலையப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 3 முடிவடையும் தருவாயில் உள்ளன. பாந்த்ரா குர்லா வளாக ரயில் நிலையம் பொறியியல் துறையில் ஓர் அதிசயமாக பூமிக்கு கீழே 32.5 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144522
***
AD/TS/SM/SMB/AG/DL
(Release ID: 2144644)