பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது

Posted On: 09 JUL 2025 7:45PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, நமீபியாவின் அதிபர் மேதகு நெடும்போ நந்தி-நதைத்வா, நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியண்ட் வெல்விட்சியா மிராபிலிஸை பிரதமருக்கு வழங்கினார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர், திரு மோடிதான்.

 

விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த கௌரவத்தை இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும், இந்தியாவிற்கும் நமீபியாவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் நீடித்த உறவுகளுக்கும் அர்ப்பணித்தார். இந்த விருதைப் பெற்றதற்காக அதிபர் நந்தி-நதைத்வா மற்றும் நமீபியா மக்களுக்கு பிரதமர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

 

பிரதமருக்கு இந்த விருது வழங்கப்படுவது, இந்தியாவிற்கும் நமீபியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு மைல்கல் ஆகும், மேலும் இந்த சிறப்பு இருதரப்பு கூட்டாண்மையை அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்ல இரு நாடுகளிலும் உள்ள இளைய தலைமுறையினருக்கு இந்த விருது உத்வேகம் அளிக்கிறது.

-----

(Release ID: 2143506)

RB/DL


(Release ID: 2143559)