கூட்டுறவு அமைச்சகம்
சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி, அகமதாபாத்தில் குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானைச் சேர்ந்த மகளிர் கூட்டுறவுத் தொழிலாளர்களுடன் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு. அமித் ஷா உரையாடினார்
Posted On:
09 JUL 2025 5:50PM by PIB Chennai
சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் கூட்டுறவுத் தொழிலாளர்களுடன் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று உரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா, ஆனந்த் மாவட்டத்தில் திரிபுவன்தாஸ் படேலின் பெயரில் "திரிபுவன்" சஹ்காரி பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். கூட்டுறவுத் துறையில் இளம் ஊழியர்களை தயார்படுத்துவதற்கான கருத்தை முதன் முதலாக திரிபுவன்தாஸ் கூறியிருந்தார் என்றும், இந்த பல்கலைக்கழகம் இதற்காகவே நிறுவப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். திரிபுவன்தாஸ் கூட்டுறவுக்கு அடித்தளமிட்டதன் காரணமாக தற்போது குஜராத்தில் 36 லட்சம் மகளிர் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்புள்ள வணிகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். கூட்டுறவு பல்கலைக்கழகத்திற்கு திரிபுவன்தாஸ் பெயரை சூட்டுவது குறித்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டபோது, அவர் யார் என்ற கேள்வி எழுந்தது என்று குறிப்பிட்ட அவர், ஒரு பெரிய பணியைச் செய்த பிறகும், அவர் தம்மை விளம்பரப்படுத்தாமல், தொடர்ந்து பணியாற்றி வந்தார் என்று தெரிவித்தார்.
பால்வளத் துறையில் அரசு நிறைய மாற்றங்களைக் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார். பசு சாணத்தை பயன்படுத்தி வருவாயை அதிகரிப்பதற்கு வரும் காலங்களில், கூட்டுறவு பால் பண்ணைகள், பசு சாண பயன்பாட்டு மேலாண்மை, விலங்குகளின் உணவு மற்றும் ஆரோக்கிய மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார். சில ஆண்டுகளில், கூட்டுறவு பால் பண்ணைகளில் பசுவின் சாணமானது இயற்கை உரம் மற்றும் எரிவாயு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் திரு ஷா கூறினார். வரும் நாட்களில், கிராமத்தில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 500 குடும்பங்களில் 400 குடும்பங்கள் கூட்டுறவு சங்கத்தில் இடம் பெறும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143458
-----
VJ/TS/IR/AG/DL
(Release ID: 2143503)