பிரதமர் அலுவலகம்
பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” பிரதமருக்கு வழங்கப்பட்டது
Posted On:
09 JUL 2025 12:58AM by PIB Chennai
பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இன்று பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.
இந்த சிறப்புமிக்க உயர் விருதிற்காக பிரதமர், அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த விருதை ஏற்றுக்கொண்ட அவர், இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும், இந்தியா – பிரேசில் இடையேயான நீடித்த நட்புறவுக்கும் கிடைத்த மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா - பிரேசில் இடையேயான உறவுகள் உத்திசார் ஒத்துழைப்பின் அடையாளமாகவும், இதனை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காக அந்நாட்டு அதிபர் திரு லூலாவின் அயராத முயற்சிகளுக்கு வழங்கப்படும் மரியாதை என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பாராட்டு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
---
(Release ID: 2143275)
AD/TS/SV/KPG/KR
(Release ID: 2143383)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam