பிரதமர் அலுவலகம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர், உருகுவே அதிபரை சந்தித்தார்.
प्रविष्टि तिथि:
07 JUL 2025 9:20PM by PIB Chennai
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உருகுவே குடியரசின் அதிபர் மாண்புமிகு திரு யமண்டு ஓர்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் முழு தன்மையையும் உள்ளடக்கிய விவாதங்களை நடத்தினர். டிஜிட்டல் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் யுபிஐ, பாதுகாப்பு, ரயில்வே, சுகாதாரம் மற்றும் மருந்துகள், விவசாயம், எரிசக்தி, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான இணைப்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்துவது, விவாதத்தின் முக்கிய பகுதியாக இருந்தது. அதிக பொருளாதார ஆற்றலுக்கும், வர்த்தக நிரப்புத்தன்மைக்கும் வித்திடும் நோக்கில், இந்தியா-மெர்கோசர்(தென்னமெரிக்காவின் வர்த்தக தொகுப்பு நாடுகள்) முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் தெரிவித்தனர்.
பஹல்காமில் சமீபத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்ததற்காக அதிபர் திரு ஓர்சிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார், மேலும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடன் உருகுவேயின் ஒற்றுமையைப் பாராட்டினார்.
எதிர்கால நோக்குடைய இருதரப்பு கூட்டாண்மையை வளர்ப்பதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
***
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2143011)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam