மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

உத்திசார் மற்றும் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் அதிக வாய்ப்புள்ள தொழில்களில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கான ஆர்.டி.ஐ. திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 JUL 2025 3:08PM by PIB Chennai

நாட்டின் ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பை மேம்படுத்தும் வகையில் உத்திசார் நடவடிக்கையாக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதன நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள்  திட்டத்திற்கு (ஆர்.டி.ஐ.)ஒப்புதல் அளித்துள்ளது.

புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், ஆராய்ச்சிப் பணிகளை வர்த்தக மயமாக்குவதிலும் தனியார் துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்பு திட்டமானது தனியார் துறையின்  முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களில் நீண்ட கால நிதியுதவி அல்லது மறுநிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் தனியார் துறையின் முதலீடுகளை ஈரப்பதில் உள்ள தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமை கண்டுபிடிப்புகளை எளிதாக்குவதற்கும், தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையிலும் வளர்ச்சிக்கு மற்றும் லாபத்திற்கு அதிக வாய்ப்புள்ள தொழில்கள், உத்திசார் துறைகளில் வளர்ச்சி மற்றும் கூடுதல் மூலதனத்தை வழங்க வகை செய்கிறது. இத்திட்டத்தின்  முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

பொருளாதார பாதுகாப்பு, உத்திசார் செயல்பாடுகள், தற்சார்பு, ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு அது சார்ந்த பிற துறைகளிலும் ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க தனியார் துறைக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான தயார்நிலை மற்றும் திட்டங்களுக்கான நிதியுதவி வழங்குவது.

முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உதவிடுதல்.

தொழில்நுட்பம்  சார்ந்த துறைகளில் நிதிசார் செயல்பாடுகளை எளிதாக்குதல்.

பிரதமர் தலைமையிலான அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவானது ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் திட்டத்திற்கு விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கும். இந்த அறக்கட்டளையின் நிர்வாகக் குழு திட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அங்கீகரிப்பதுடன் வளர்ச்சி துறைகளில் 2-ம் கட்ட நிதி மேலாண்மை மற்றும் திட்டப் பணிகளின் நோக்கம் வகைகள் குறித்து தனது பரிந்துரைகளை வழங்கும். மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான  அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு, திட்டத்தின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதுடன், அதில் உரிய மாற்றங்கள், துறைகள் மற்றும் திட்டங்களின் வகைப்பாடு மற்றும் இரண்டாம் நிலை நிதி மேலாளர்களை அங்கீகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141130

 

------

AD/TS/SV/KPG/KR


(Release ID: 2141244) Visitor Counter : 7