பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 10 ஆண்டுகால செயல்பாடுகளுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 01 JUL 2025 9:40AM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, எண்ணற்ற பயனாளர்களைச் சென்றடைந்து மக்களுக்கு அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம் தொடங்கியதற்கான பயணத்தின் சாட்சியாக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "140 கோடி மக்கள் ஒன்றிணைந்து உறுதியுடன் பயன்படுத்தி வரும் டிஜிட்டல்  பணப்பரிமாற்றத்தில் இந்தியா பல்வேறு துறைகளில்  வளர்ச்சியின் உச்சத்தை எட்டியுள்ளது என்று திரு நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார்.

மைகவ்இந்தியா செயலி வாயிலாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"டிஜிட்டல் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆகும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு,  நாட்டை டிஜிட்டல் அதிகாரம்  மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக டிஜிட்டல் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான பயனாளர்களுடன்  பணப்பரிவர்த்தனைகளில் புதிய சகாப்தத்தைத் தொடங்கிய ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக இருக்கிறோம். 140 கோடி இந்தியர்களின் ஒருங்கிணைந்த உறுதியான செயல்பாடுகளால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் இந்தியா  முன்னேற்றம் அடைந்துள்ளது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகளும் இந்த முயற்சியால் பயனடைந்துள்ளன.

இந்தத் தொடர் இணைப்பு மாற்றம் மற்றும் அதன் அளவு குறித்த காட்சிகளை வழங்கும்."

---

(Release ID: 2141009)

AD/TS/SV/KPG/KR


(Release ID: 2141195)