உள்துறை அமைச்சகம்
உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகள் 2029-ஐ நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருப்பது, அனைத்து குடிமக்களுக்கும் பெருமிதம் அளிக்கக் கூடிய தருணம்: உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா மகிழ்ச்சி
Posted On:
27 JUN 2025 4:48PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா, உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகள் 2029-ஐ நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார். இது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமிதம் அளிக்கக் கூடிய தருணம் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகள் 2029-ஐ நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் தருணமாக உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக இது உள்ளது. 50-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் போட்டியிட காவல்துறை, தீயணைப்பு, பேரிடர் சேவைகளை ஒன்றிணைக்கும் நிகழ்வு நடைபெறும் இடமாக அகமதாபாத் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு தலங்களுக்கான மதிப்பை உயர்த்தும் நிலைக்கு ஒரு சான்றாகும்.
----
(Release ID: 2140184)
AD/TS/SV/KPG/DL
(Release ID: 2140246)
Read this release in:
Bengali-TR
,
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada